விபச்சாரத்திற்கு அங்க போக வேண்டியது தான! கடும் கோபத்துடன் கருணாஸ்

Karunas Sri Reddy

தமிழ் சினிமாவில் சில நாட்களாகவே பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் உள்ளதாக கூறிவருகிறார் “ஸ்ரீ ரெட்டி”. இவர் இதற்கு முன் தொலுங்கு படவுலகிலும் பலரின் பெயர்களை கூறினார். அதில் பல முக்கிய நடிகர்களின் பெயர்களும் அடிபட்டது.

இப்படி இந்த விஷயம் சென்று கொண்டிருக்கும் போது, ஸ்ரீ ரெட்டி தமிழ் சினிமாவில் புகுந்து பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது புகர்களை தெரிவித்தார். ஸ்ரீ ரெட்டி கூறிய அனைத்தும் இங்கு நடக்கிறது என்றும் அவருக்கு தனது ஆதவுகளை தருவதாக டி ராஜேந்திரன், கஸ்தூரி போன்றோர் கூறினார்கள். இந்நிலையில், நடிகர் மற்றும் எம்.எல்.ஏ. கருணாஸிடம் இது கூறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு கடும் கோபமான கருணாஸ், “சினிமா மீது ஆசை கொண்டு வரும் பெண்களை பாலியல் ரீதியான தவறான காரியங்களுக்கு பயன்படுத்துவதற்கு பதில், விபச்சாரத்திற்கு என்று சில நாடுகள் அங்கிகரிக்கப்பட்டு உள்ளது. அங்கு போகவேண்டியது தான இவர்கள்.இவ்வளவு பெரும் புகழ் இருக்கும் நீங்கள் இப்படி கேவலமாக நடந்து கொள்ளலாமா, உன்னிடம் பணமில்லையா?” இவ்வாறு கூறினார்.

மேலும், “ஸ்ரீரெட்டி தற்போது இது போன்ற விஷயங்களை வெளியில் சொன்னதால், இனிமேலாவது இதுபோன்று ஏமாற்று வேலைகளை செய்யும் போது அவர்களுக்கு ஒரு பயம் ஏற்படுமல்லவா.” என்று நடிகை ஸ்ரீரெட்டி முன்வைத்து வரும் குற்றசாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

Karunas Sri Reddy