சீமராஜா திரை விமர்சனம்

சீமராஜா திரை விமர்சனம்
சீமராஜா திரை விமர்சனம்

சீமராஜா திரை விமர்சனம். சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இயக்குனர் பொன்ராம் உடன் இணையும் படம் தான் சீமராஜா. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்துள்ளார்.

கதைக்களம்

ராஜா குடும்பத்து வாரிசான சிவகார்த்திகேயன் எந்த வேலைக்கும் போகாமல் வெட்டியாக ஊரை சுற்றி வருகிறார். அப்போது சமந்தாவை பார்த்தவுடன் காதலில் விழுகிறார்.

சீமராஜா திரை விமர்சனம்
சீமராஜா திரை விமர்சனம்

சிவாவின் பக்கத்து ஊர்க்காரா பொண்ணு தான் சமந்தா. அங்கு தான் நடிகர் லால் ஊரையே மிரட்டி விவசாய நிலங்களை பறித்து வருகிறார். லால் மற்றும் சிம்ரனுக்கு சிவகார்த்திகேயனை பிடிக்காது. லாலின் முதல் மனைவியின் மகள் தான் சமந்தா. இந்த விஷயம் சிவாவிற்கு தெரிந்த பின்பு சமந்தாவை கரம்பிடித்தாரா? மக்களின் விவசாய நிலங்களை மீட்டாரா? என்பது தான் கதை.

படத்தை பற்றிய அலசல்

சிவகார்த்திகேயன் தன்னால் முடிந்த அளவுக்கு திரையில் அவரின் மொத்த நடிப்பையும் கொடுத்துள்ளார். இவரின் காதாப்பாத்திரத்தை தவிர படத்தின் எந்த ஒரு கதாப்பாத்திரமும் நினைவில் நீக்கவில்லை. சிம்ரனுக்கு டப்பிங் பேசியவரின் குரல் கொஞ்சம் கூட செட்டாகவில்லை. லால் மற்றும் நெப்போலியன் போன்றோர் மக்களுக்கு பெரிய ஏமாற்றமே. இயக்குனர் பொன்ராம் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பதா இல்லை காமெடிக்கு முக்கியத்துவம் கொடுப்பதா என்ற இடத்தில் மிகவும் தடுமாறியுள்ளார்.

சீமராஜா திரை விமர்சனம்
சீமராஜா திரை விமர்சனம்

முதல் பாதியில் காமெடி கொஞ்சம் ஓ.கே. என்பதால் தப்பித்துவிட்டது. அதே போல் இரண்டாம் பாதியிலும் காமெடி மற்றும் ராஜா கதாப்பாத்திரத்தினை ஆரம்பத்திலே கொண்டுவந்திருந்தால் படம் சூடுபிடித்திருக்கும்.

ஆனால் இரண்டாம் பாதியின் இறுதியில் தான் ராஜா கதாப்பாத்திரம் என்பதால் நமது பொறுமையை அது கொஞ்சம் சோதிக்கிறது.

சீமராஜா திரை விமர்சனம்
சீமராஜா திரை விமர்சனம்

டி.இமானின் இசையில் பாடல்கள் ஓ.கே. என்றாலும் பின்னணி இசையில் இன்னும் சிறப்பாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஒளிப்பதிவு அருமை. அதிலும் ராஜா வரும் காட்சிகள் பக்கா மாஸ்.

க்ளாப்ஸ்

படத்தில் சிவகார்த்திகேயன், சூரி காமெடி காட்சிகள். மற்றும் படத்தின் முதல் பாதி.

சீமராஜா திரை விமர்சனம்
சீமராஜா திரை விமர்சனம்

பல்ப்ஸ்

வில்லன் மற்றும் வில்லி கதாப்பாத்திரம் இன்னும் சற்று அழுத்தமாக இருந்திருக்கலாம். அவர்கள் தான் வில்லன் என்றால் நம்மால் நம்பமுடியவில்லை. திரைக்கதைக்கு கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். இரண்டாம் பாதியில் ராஜா போஷன் தவிர மற்றவை கொஞ்சம் இழுவை ரகம் தான். Seema Raja Rating (2.5/5)

மொத்தத்தில் சீமராஜா குடும்பத்துடன் சென்று ஒருமுறை பார்க்கும் ராஜா தான்.

சீமராஜா திரை விமர்சனம்
சீமராஜா திரை விமர்சனம்