விஜய் அட்லி அடுத்த படத்தின் கதைக்கரு இதுதானாம்

vijay atlee next movie

சர்கார் படத்தில் வெற்றி கூட்டணியான விஜய்யும் இயக்குனர் முருகதாஸும் மறுபடியும் சேர்ந்துள்ளனர். அமெரிக்கா, சென்னை என வெவ்வேறு லொக்கேஷனில் படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது.

இதற்கு அடுத்ததாக விஜய் யாரு படத்தில் நடிக்க இருக்கிறார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில் தெறி, மெர்சலை தொடர்ந்து மீண்டும் அட்லியுடன் பணியாற்ற உள்ளார் என்ற செய்தி தளபதி ரசிகர்கள் காதில் தேனாய் பாய்ந்தது.

இந்நிலையில் விஜய்யுடம் மறுபடியும் பணியாற்றுவது குறித்து அட்லி கூறுகையில், ’இதற்கு முன்னதான படங்களில் இவ்வளவு பெரிய நடிகரை வெச்சி இயக்குறதுல கொஞ்சம் படப்படப்பு இருந்தது, ஆனால் இப்போது கொஞ்சம் தைரியம் வந்துருக்கு.

இதுவரைக்கும் பண்ணாத ஒன்றை பண்ணலாம் என மைண்டில் ஓடினு இருக்கு, பயங்கரமா எதுனா ஒன்னு பண்ணனும், ஒரு மாதிரி ஐடியா மாட்டிகிச்சு, expected பண்ணாததை பண்ண போறேன்’ என்றார். இவர் இப்படி கூறியதில் இருந்து விஜய் ரசிகர்களை கையில் பிடிக்க முடியவில்லை.