விஜய் 63 படத்தின் முக்கிய அப்டேட்..! விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

vijay atlee

நடிகர் விஜய் தற்போது சர்கார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது எல்லாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். தற்போது விஜய்யின் அடுத்த படத்தின் முக்கிய அப்டேட் வந்துள்ளது.

Vijay Sarkar Shooting Spot Photos

தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்யுடன் அட்லீ சேரும் படம் தான் விஜய்-63. இந்த படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விஜய் 63 படத்தின் அதிகாரபூர்வ தகவல் வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று அறிவிக்க உள்ளார்களாம்.

மேலும், அன்று தான் விஜய் தற்போது நடித்து வரும் சர்கார் சிங்கிள் ட்ராக் வெளியாகும் என சர்கார் படக்குழு கூறியிருந்தது. எனவே, இந்த இரண்டு படங்களில் தகவல்களால் விஜய் ரசிகர்களுக்கு விநாயகர் சதுர்த்தி அன்று செம்ம கொண்டாட்டம் தான்.

vijay atlee