தனி ஒருவன் 2 படத்தின் நடிகை மற்றும் இசையமைப்பாளர் பற்றிய தகவல்

Thani Oruvan 2

இயக்குனர் கோகன் ராஜா இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் தனி ஒருவன். இந்த படத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா மற்றும் அரவிந்த் சாமி நடித்திருந்தனர். இந்த படத்தின் கதையை மோகன் ராஜா தான் எழுதியிருந்தார். இந்நிலையில் தற்போது தனி ஒருவன் 2 படத்தினை எடுக்கவுள்ளார்.

தனி ஒருவன் 2 ஆம் பாகத்தில் கதாநாயகனாக ஜெயம் ரவி தான் நடிக்கிறார். இந்த தகவலை ட்விட்டர் மூலம் முன்பே கூறியிருந்தனர். மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்கிறாராம். இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றவுள்ளார். இதற்கு முன் தனி ஒருவன் முதல் பாகத்தில் ஹிப்ஹாப் ஆதி தான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்தது அரவிந்த் சாமி. அவரின் கதாப்பாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது. இந்நிலையில் தனி ஒருவன் 2 படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம். ஹீரோ மற்றும் வில்லன் ஆகிய வேடங்களில் நடிக்கிறார் என்ற சூப்பர் தகவல் வந்துள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

samantha