மோகன் ராஜாவின் அடுத்த அதிரடி அறிவிப்பு..! மாபெரும் வெற்றிப் படத்தின் இரண்டாம் பாகம்

thani oruvan 2 latest news

இயக்குனர் மோகன் ராஜா பல ரீமேக் படங்களை தமிழில் கொடுத்து வெற்றி பெற்றார். ஆனால் பலரும் இவரை ரீமேக் இயக்குனராகவே பார்த்தனர். அதன்பின் அவரும் அவரது தம்பியுமான ஜெயம் ரவியும் சேர்ந்த படம்தான் தனி ஒருவன். இந்த படத்தின் முழுக் கதையையும் மோகன் ராஜாவே எழுதி இயக்கியிருந்தார்.

கடைசியாக இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வேலைக்காரன் படத்தினை இயக்கினார். சமூக கருத்துள்ள பல நல்ல படங்களை இயக்கிவரும் மோகன் ராஜாவுக்கு என தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

இந்நிலையில் இவர் அடுத்து நடிகர் விஜய்யை வைத்து படம் இயக்குவார் என எதிர்பார்த்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அதுதான் தனி ஒருவன் படத்தின் 2-ஆம் பாகம் பற்றிய அறிவிப்பு. மீண்டும் அவர் ஜெயம் ரவியுடன் சேர்ந்து தனி ஒருவன் 2 படத்தினை இயக்கவுள்ளார். இதோ அவர் வெளியிட்ட வீடியோ…