சிவகார்த்திகேயன் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு! இயக்குனர் இவரா?

சிவகார்த்திகேயன் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு!

சிவகார்த்திகேயன் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு! இயக்குனர் இவரா? சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் சீமராஜா. இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

வசூலும் சிவாவின் முந்தைய படங்களை விட குறைவாகத் தான் வந்து கொண்டுள்ளது. இதனால் இந்த படம் இந்த வாரமே திரையரங்குகளில் இருந்து நீக்கப்படவும் வாய்ப்புள்ளது. சீமராஜா படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் இயக்குனர் ரவிக்குமார் படத்தில் நடித்து வருகிறார். அதன் பின்பு இரும்புத்திரை படத்தினை எடுத்த பி.எஸ்.மித்ரன் படத்தில் தான் நடிக்க உள்ளாராம்.

இந்த படத்தை 24 ஏ எம் ஸ்டூடியோ நிறுவனம் தான் தயாரிக்கிறதாம். இந்த படத்தின் இசையமைப்பு பணிகளை யுவன் சங்கர் ராஜா தான் பார்த்து கொள்கிறாராம்.

படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படமும் இரும்புத்திரை போல் சமூக கருத்துள்ள படமாகத்தான் இருக்குமாம்.