சர்கார் படப்பிடிப்பில் விஜய்க்கு ஏற்பட்ட எதிர்பாராத சம்பவம்.. தீயாய் பரவும் தகவல்!

நடிகர் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவரும் படம் சர்கார். இப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படப்பிடிப்பின் போது விஜய்க்கு எதிர்பாராத காயம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன.

சர்கார் படபிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையை எட்டியுள்ளது. விஜய்க்கு ஏற்பட்ட இந்த காயம் சண்டைக்காட்சியின் போது ஏற்படவில்லையாம். சமீபத்தில் லாஸ்வேகாஸில் சர்கார் படத்தின் பாடல் காட்சி ஒன்றில் நடனமாடும் போது கால் தவறி லேசாக காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவிவருகிறது. ஆனாலும், சிறிது நாள் சிகிச்சை பெற்றுவிட்டு மீண்டும் சர்கார் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.

மேலும் லாஸ் வேகாஸில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, சென்னை வந்து படத்தின் டப்பிங் வேலைகளை தொடங்க படக்குழு முடிவெடுத்துள்ளது. அதன்பின் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை தொடங்க சர்கார் படக்குழு திட்டமிட்டுள்ளது.

sarkar song shooting spot