சர்கார் படத்தின் சிங்கிள் டிராக் வெளியாகும் தேதி இதோ! ரசிகர்கள் கொண்டாட்டம்

sarkar single track release date

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் முருகதாஸ் இயக்கிவரும் படம் சர்கார். இந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் சர்கார் படபிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஒவ்வொன்றாக, தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 2-ஆம் நாள் நடைபெற இருப்பதாகவும் அறிவித்தனர். மேலும், ரசிகர்களை மகிழ்விக்க முன்னதாகவே இந்தபடத்தின் சிங்கிள் டிராக் ஒன்றினை செப்டம்பர் 19-ஆம் தேதி வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை கேட்ட விஜய் ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.

சர்கார் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலட்சுமி முக்கிய கதாப்பாத்திரத்திலும், ராதாரவி மற்றும் பழ.கருப்பையா வில்லன் அரசியல்வாதிகளாக நடிக்கின்றனர். அதுமட்டுமின்றி சர்கார் படம் அரசியல் தொடர்பான கதை என்பதால், பல அரசியல் காட்சிகள் பல இடத்தில் இருக்குமாம். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகாமகவுள்ளது.

Vijay Sarkar Shooting Spot Photos