சர்கார் படத்தின் பாடல் பற்றிய முக்கிய அப்டேட்

சர்கார் படத்தின் பாடல் பற்றிய முக்கிய அப்டேட்
சர்கார் படத்தின் பாடல் பற்றிய முக்கிய அப்டேட்

சர்கார் படத்தின் பாடல் பற்றிய முக்கிய அப்டேட் வெளியானது. தளபதி விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் படம் சர்கார்.

இந்த படத்தின் பாடல் பற்றிய முக்கிய தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. சர்கார் படத்தின் பாடல்கள் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகி வருகிறது.

படத்தின் பாஸ்ட் லுக் மட்டுமே வெளியாகிய நிலையில் தற்போது தான் படத்தின் பாடல் வெளியாகும் தேதி பற்றி தகவல் வந்துள்ளது.

இசை புயல் ஏ.ஆர்.ரகுமானின் பிறந்தநாள் வரும் செப்டம்பர் 25 தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் செப்டம்பர் 24 ஆம் தேதி மாலை 6 மணிக்கு சர்கார் படத்தின் சிங்கள் ட்ராக் வெளியாகுமாம். அதன் பின்பு அடுத்த மாதம் அக்டோபர் 2 ஆம் தேதி அனைத்து பாடல்களும் வெளியாகும். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.