சர்கார் படத்தின் கதை இதுதான்!

sarkar movie story tamil

நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படம் சர்கார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு கூறியுள்ளது.

இந்நிலையில் சர்கார் படத்தின் கதை என பல கதைகள் இணையத்தில் உலாவருகிறது. இதில் அனைவரும் நம்பும்படி ஒரு கதை பரவி வருகிறது. அது என்னவென்றால், பிரபல தொழிலதிபராக இருக்கும் விஜய் தேர்தலின்போது தனது ஓட்டுரிமையை செலுத்த சொந்த ஊருக்கு வருகிறார்.

ஆனால் வரும் விமானம் தாமதம் ஆகிறது, சொந்த ஊர் சென்று பார்த்தால் அங்கு அவரது வாக்கை ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த சிலர் கள்ளஓட்டாக போட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியாகிறார். அந்த கள்ள ஓட்டு சம்பவத்தால் அரசியலில் குதித்து, சாக்கடையாக இருக்கும் அரசியலில் புரட்சி செய்கிறார்.

மிகுந்த எதிர்பார்பில் இருக்கும் சர்கார் படத்தின் டீசர் செப்டம்பர் 13-இல் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்படவுள்ளது.