சக நடிகருடன் புகைப்படம் எடுக்க மறுத்த விஜய்.. காரணம் இதுதானாம்.!

தளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். படப்பிடிப்பு இறுதி கட்டத்தினை நெருங்கியுள்ளது. படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் பிரேம் குமார் விஜய் பற்றி கூறியுள்ளார். அவர் கூறியதாவது “உங்களோடு ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என கேட்டேன்”. அதற்கு அவர், “இப்போது எடுத்தால் ஃபர்ஸ்ட்லுக் கெட்டப் வெளியே வந்துவிடும் என்று கூறிவிட்டு, நானே எதிர்பார்க்காத நேரத்தில் வாங்க..பிரேம் போட்டோ எடுக்கலாம் என கூறினார். எனக்கு அப்போ என்ன சொல்றதுனே தெரியல..பயங்கர ஷாக் ஆயிடுச்சி’ என்றார்.

பின்னர் சர்கார் ஃபர்ஸ்ட்லுக் வந்தவுடன் விஜயுடன் புகைப்படம் எடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.

sarkar movie shooting stills