சர்கார் படத்தில் பணியாற்றும் பிரபலத்தை கோபப்படுத்திய விஜய் ரசிகர்கள்

சர்கார் படத்தின் பிரபலத்தை கோபப்படுத்திய விஜய் ரசிகர்கள்

சர்கார் படத்தின் பிரபலத்தை கோபப்படுத்திய விஜய் ரசிகர்கள். தளபதி விஜய் நடிப்பில் சர்கார் படம் தீபாவளிக்கு வெளிவர இருக்கிறது.

ஏற்கனவே படத்தினை பற்றி பல தகவல்கள் வெளிவந்துள்ளது. அது மட்டுமில்லாமல் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் சில வெளியாகின.

இருந்தாலும் விஜய் ரசிகர்கள், சர்கார் படத்தில் பணியாற்றும் பிரபலங்களிடம் புதிய அப்டேட் கேட்டு வருகின்றனர். இதனால் கடுப்பாகிய பாடலாசிரியர் விவேக் டிவிட்டரில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.

அதில், “விஜய் மீது உள்ள அன்பால் நீங்கள் படத்தினை பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள நினைக்கிறீர்கள். ஆனால் படக்குழுவாகிய நாங்கள் அதற்கு சரியான நேரத்தினை பார்த்து கிண்டிருக்கிறோம். என்னால் தற்போது எந்த தகவலும் சொல்ல முடியாது மன்னித்துவிடுங்கள்.” என கூறியுள்ளார்.