இருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த தலைப்பு: கேட்டா ஷாக் ஆகிடுவிங்க!

ஹர ஹர மகாதேவி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சந்தோஷ் பி ஜெயக்குமார். இந்த படத்தில் நடிகர் கெளதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படம் 2017ஆம் ஆண்டு வெளியானது. அதன்பின் இருட்டு அறையில் முரட்டு குத்து மற்றும் கஜினிகாந்த் என்ற இரண்டு படங்களை இயக்கிவிட்டார் சந்தோஷ்.

இந்நிலையில் இவர் தனது அடுத்த படத்தின் தலைப்பை கூறியுள்ளார். அதற்கு ஸ்டார்ட் கேமரா ஆக்சன் என்று பெயர் வைத்துள்ளார். இந்த படம் ஒரு கமெர்ஷியல் படமாக உருவாகி வருகிறதாம். அது மட்டுமில்லாமல் இந்த படத்தினை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் தயாரிக்கிறார். இந்த படத்தின் நடிகர் நடிகை மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சில நாட்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. ஏற்கனவே வெளியான இவரது படங்கள் இளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்தவகையில் இந்த ஸ்டார்ட் கேமரா ஆக்சன் படமும் கமெர்ஷியல் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Santhosh P. Jayakumar