“விஸ்வரூபம் 2” படத்தின் செய்தியால் அதிர்ச்சியான கமல் ரசிகர்கள்

விஸ்வரூபம் 2

கமல் இயக்கி நடித்திருக்கும் படம் விஸ்வரூபம் 2. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. படத்தின் புரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், “சாதி மதம்” என்ற மூன்றாவது சிங்கில் ட்ராக் வெளியாகியிருந்தது. பின்னர் இப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டார்கள்.

விஸ்வரூபம் 2 movie

தற்போது சென்சார் போர்டு இப்படத்திற்கு பல கட், மீயூட் மற்றும் காட்சி மாற்றம் அளித்துள்ளது. அதன் விவரங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. இதில் மொத்தம் 22 இடங்களில் சென்சார் போர்டு கை வைத்துள்ளார்கள். ஏற்கனவே சென்சாரில் யூ/ஏ சான்றிதழ் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.