திரையரங்குகளில் அதிக மக்கள் கூட்டம் கூடிய படம்? காலாவை பின்னுக்கு தள்ளிய படம் இதுதான்

Kadaikutty Singam most crowd theaters

இந்த வருடம் மட்டும் தமிழ் சினிமாவில் 100க்கும் அதிகமான படங்கள் வந்துவிட்டது. இதில் வெற்றிப் படங்கள் என்று பார்த்தால் ஒருசில படங்கள் தான்.

நிலைமை இப்படி இருக்க, தமிழ் சினிமாவில் இந்த வருடம் அதிக பேர் பார்த்த படம் எது? என்ற தகவல் வந்துள்ளது. இதற்கு முந்தைய வாரம் வரை காலா தான் முதல் இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி காலாவை பின்னுக்கு தள்ளி கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் முதலிடத்தை பிடித்துள்ளது.

கடைக்குட்டி சிங்கம் தமிழகம் முழுவதும் 55 கோடி வசூல் செய்துள்ளது. இந்தப் படத்தைதான் இந்தவருடம் அதிக பேர் திரையரங்குகளில் வந்து பார்த்துள்ளனர். அதுமட்டுமின்றி கார்த்தியின் திரை பயணத்தில் அதிகம் வசூல் செய்த படமும் இதுதான். கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு அடுத்த இடங்களில் காலா, தானா சேர்ந்த கூட்டம், இரும்புத்திரை மற்றும் டிக் டிக் டிக் ஆகிய படங்கள் உள்ளன.

Kadaikutty Singam