என்னை நோக்கி பாயும் தோட்டா ரிலிஸ் எப்போது தெரியுமா? தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம்

ennai nokki paayum thotta release date

நடிகர் தனுஷ் தற்போது அதிக படங்களில் நடித்துவருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் படம் வட சென்னை. இந்த படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் ஆர்வமாக உள்ளனர். ஆனால் நீண்ட நாட்களாக வெளிவராமல் இருக்கும் படம் தான் என்னை நோக்கி பாயும் தோட்டா.

இந்த படத்தில் தனுஷ் உடன் நடிகர் மற்றும் இயக்குனர் சசிக்குமார் நடிக்கிறார். கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். இந்த படத்தின் இறுதிகட்ட படபிடிப்பு தற்போது முடிவடைந்து விட்டது. படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில் படகுழுவினர் தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தும் விதமாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படங்களை இயக்குனர் கௌதம் மேனன் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் உள்ள கேக்கில் Happy Diwali 2018 என்று உள்ளது. ஒரு வேலை படம் தீபாவளியன்று வெளியாக போவதைத் தான் இப்படி நமக்கு கூறுகிறார்களே.!! விஜய்யின் சர்கார் படமும் தீபாவளி அன்று தான் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.