ரஜினியின் 2.0 டீசர் ரிலீஸ் தேதி இதோ! ரசிகர்கள் கொண்டாட்டம்

2.0 teaser release date

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக வர இருக்கும் படம் 2.0 தான். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு இருக்கிறது. காரணம் இதற்கு முன் வெளியான எந்திரன் படம் தான். இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்றது.

2.0 படத்தின் டீசர் இதற்க்கு முன்பே வரவேண்டியது. ஆனால் சில காரணங்களால் படத்தின் இயக்குனர் சங்கர் டீசரை வெளியிடாமல் உள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்கிறார். தற்போது கிடைத்துள்ள தகவலின் படி 2.0 படத்தின் டீசர் அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றனர்.

இதற்கு முன் சொன்ன தேதியில் டீசர் வராததால் ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் உள்ளனர். காந்தி ஜெயந்தி அன்றாவது டீசர் வருமா? என்று பொருத்திருந்து பார்ப்போம்.