யு டியூபில் சூப்பர் ஸ்டார் மட்டுமே நிகழ்த்திய சாதனை! ரஜினி தான் மாஸ்

யு டியூபில் சூப்பர் ஸ்டார் மட்டுமே நிகழ்த்திய சாதனை!

யு டியூபில் சூப்பர் ஸ்டார் மட்டுமே நிகழ்த்திய சாதனை! ரஜினி தான் மாஸ். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படம் 2.0 தான்.

இந்த படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கம் பேட்ட படம் தான் வெளியாக இருக்கிறது.

இந்த பேட்ட படத்தில் தான் 80’s 90’s குழந்தைகளின் கனவு கன்னி சிம்ரன் நடிக்கிறார். மேலும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். மற்ற மொழிகளில் பல சூப்பர் ஸ்டார்கள் வந்து விட்டனர். ஆனால் தமிழில் ரஜினி தான் இன்று வரை சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார்.

சிங்கத்திற்கு வயதாகிவிட்டாலும் சிங்கம் சிங்கம் தான். அது போல் ரஜினி தான் என்றுமே சூப்பர் ஸ்டார்.

யு டியூபில் சூப்பர் ஸ்டார் மட்டுமே நிகழ்த்திய சாதனை!

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் வெளியான 2.0 படத்தின் டீஸர் பல சாதனைகளை செய்து வருவதை நாம் அனைவரும் அறிவோம்.

தற்போது யு டியூபில் 2.0 டீஸர் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

ஆம் 2.0 தமிழ் டீஸர் வெளியாக 5 நாட்கள் ஆகியும் யு-டியூபில் முதல் இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த சாதனையை இதுவரை யாரும் செய்யவில்லை.ரஜினியின் 2.0 டீஸர் தான் முதல் முறை. இதை பார்த்த அனைவரும் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட ரஜினிகாந்தால் மட்டுமே இப்படியான சாதனைகளை செய்ய முடியும் என்று கூறிவருகின்றனர்.