ரசிகர்களால் விஸ்வாசம் படத்திற்கு ஏற்பட்ட தொல்லை

ரசிகர்களால் விஸ்வாசம் படத்திற்கு ஏற்பட்ட தொல்லை

ரசிகர்களால் விஸ்வாசம் படத்திற்கு ஏற்பட்ட தொல்லை . சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்கும் விஸ்வாசம் படத்தில் தான் தற்போது அஜித் நடித்து வருகிறார்.

இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். டி.இமான் தான் இசையமைத்து வருகிறார். மேலும் அஜித்திற்கு நயந்தாரா தான் ஜோடியாக நடிக்கிறார்.

விஸ்வாசம் படம் கிட்டத்தட்ட 90 சதவீதம் படப்பிடிப்பு முடிந்து விட்டதாம்.ஆகவே படத்தை இந்த மாதம் இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனராம்.

அப்படி முடியவில்லை என்றால், அடுத்த மாதம் ஆரம்பத்திலே முடிக்க வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன் கூறியுள்ளாராம்.

படப்பிடிப்பு பல நாட்களாக நடக்காமல் தற்போது தான் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. தயாரிப்பாளர் சங்கம் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டம் தான் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு நிறுத்த காரணம் என சொல்லப்பட்ட்து.

ரசிகர்களால் விஸ்வாசம் படத்திற்கு ஏற்பட்ட தொல்லை

அதுவும் ஒரு காரணம் என்றாலும், முக்கியமான மற்றொரு காரணமும் உள்ளதாம். முதலில் விஸ்வாசம் படப்பிடிப்பு தேனீ பகுதியை சுற்றியுள்ள இடங்களில் எடுக்க இருந்தார்களாம்.

ஆனால் அஜித் தான் அங்கு வேண்டாம், ரசிகர்களின் அன்பு தொல்லை அதிகமாக இருக்கும் என கூறி விட்டாராம். பின்னர் தான் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடத்தப்பட்டது.