மஹத்தை வெளியில் பார்த்ததும் கன்னத்தில் பளார் விட்ட சிம்பு

பிக்பாஸ்-2 நிகழ்ச்சி தற்போது 70 நாட்களை கடந்துவிட்டது. நேற்று பிக்பாஸ் வீட்டை விட்டு மஹத் வெளியே வந்தார்.

பிக்பாஸில் மஹத் முதல் இரண்டு வாரங்கள் மட்டும் நல்லவராக இருந்தார். இவர்தான் பிக்பாஸ்-2 இன் வெற்றியாளர் என பலர் கூறினர். ஆனால் அதன்பின் இவர் செய்த அநாகரிகமான செயல்களால் மக்கள் மத்தியில் கடும் வெறுப்பினை சம்பாதித்தார். அதுமட்டுமில்லாமல் மும்தாஜிடம் இவர் செய்த அடாவடியான செயல்கள் பார்க்கும் அனைவரையும் முகம் சுழிக்கும் படிச் செய்தது.

இந்நிலையில் வெளியே வந்த மஹத் சிம்புவை சந்தித்தார். அவரை பார்த்த சிம்பு கன்னத்தில் பளார் பளார் என அறைந்தார். இதற்க்கு முன் மஹத் மங்காத்தா, ஜில்லா போன்ற படங்களில் நடித்துள்ளவர். அதன்பின் சிம்பு தான் இவரை பிக்பாஸ்-2 வில் கலந்து கொள்ளும் படி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.