கண்ணீர் விட்ட தாடி பாலாஜி ! அதற்கு நித்யா இப்படியா கூறுவார்…

பிக்பாஸ் வீட்டில் சென்றவாரம் மஹத் வெளியேற்றப்பட்டார். அதன்பின் தற்போது வரை எந்த சண்டையும் இல்லாமல் போய்கொண்டுள்ளது. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களின் குடும்பங்கள் உள்ளே வருகின்றனர். அவர்களைப் பார்த்து பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் கண்ணீரில் மூழ்கிபோய் உள்ளனர்.

பாலாஜி மனைவி நித்யா ஏற்கனவே பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். இந்நிலையில் அவர் கடிதம் ஒன்றினை பாலாஜிக்கு அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “உனக்கு நான் ஒரு தோழியாக மட்டும்தான் இருப்பேன்” என்று எழுதியுள்ளார். இதை பார்த்த பாலாஜி கண்களில் கண்ணீர் வடிக்க அழுகிறார். அவர் அழுகும் அந்த வீடியோவினை பார்த்த நித்தியா சமூக வலைதளத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார்.

அதில், ”9 வருடங்களுக்கு பிறகு பாலாஜி கண்ணீர் சிந்துவதை பார்க்கிறேன். அவரை மனிதராக வேண்டுமானால் ஏற்றுக்கொள்வேனேத் தவிர கணவராக ஏற்றுக்கொள்ள மாட்டேன்.” என கூறியுள்ளார் நித்யா.

nithya balaji