பல கோடி பேர் பார்க்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மகத் செய்த அநாகரீக செயல்

mahat bigg boss

பிக்பாஸ் நிகழ்ச்சி தான் தற்போது அனைவராலும் பார்க்கும் டீவி நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. பிடித்திருக்கோ..! பிடிக்கவில்லையோ..! பல பேர் பார்க்க, நண்பர்கள் மத்தியில் பேசிக் கொண்டுள்ளனர். காரணம் பிக்பாஸ் சீசன் 1 தான். அதில் ஓவியாவை அனைவருக்கும் பிடித்துவிட்டது. ஆனால் பிக்பாஸ் 2-இல் பல அநாகரீக செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

சில போட்டியாளர்கள் செய்யும் வரம்பு மீறிய செயல்கள் பார்க்கும் அனைவரையும் முகம் சுழிக்க வைக்கிறது. அதுமாதிரிதான் டாஸ் என்ற பெயரில் மகத், மும்தாஜின் உருவத்தை கிண்டல் செய்தது மிகவும் அசிங்கமாக இருந்தது.

இந்த வாரம் பிக்பாஸ் ஒரு டாஸ் கொடுத்தார். அதில் இரண்டு அணிகளாக பிரிந்து, ஒரு போட்டியாளர் மற்ற போட்டியாளர் போன்று அனைத்தையும் செய்ய வேண்டும். இந்த டாஸ்கிற்கு பெயர் “உன்னைப் போல் ஒருவன்” என அறிவித்தார் பிக்பாஸ். இதில் மகத், மும்தாஸ் உருவத்தினை போன்று இருக்க வேண்டும் என்பதற்காக தனது பின் இடுப்பின் கீழ் ஒரு தலையணையை வைத்தார். அதை வைக்க வைஷ்ணவி உதவி செய்தார். இதை பார்த்த பார்வையாளர்களுக்கு மகத்தின் மீது எரிச்சல் ஏற்பட்டது.

அதுமட்டுமல்லாமல் மஹத் மற்றும் பொன்னம்பலம் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு இருந்து கொண்டிருந்த போது மும்தாஜ் கதாபாத்திரத்தில் இருந்த மஹத்தை, பொன்னம்பலம் ‘கம்மியா சாப்பிடு மா.. பின்னாடி எப்படி பெருத்திருக்கு பாரு…’ என்று கேவலமாக கமண்ட் செய்தார். மற்ற போட்டியாளர்களும் பொன்னம்பலம் கூறியதை கண்டித்தனர். அதன்பின் மகத் தான் அணிந்திருந்த பேண்ட்டை கழற்றி மாற்றி, எதிர் அணியை எரிச்சல் படுத்தினார். மஹத், மும்தாஜை தான் கிண்டல் செய்கிறார் என்று புரிந்து கொண்ட ஜனனி, பொன்னம்பலம், பாலாஜி, ஆகியோர் சிரித்துக் கொண்டிருந்தனர். ஆனால், பார்க்கும் பார்வையாளர்களாகிய நமக்கு அவரின் அநாகரிகமான செயலை கண்டு எரிச்சல் தான் அதிகமாகியுள்ளது.