பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகும் பிரபலம்… கதவை திறந்த கமல்

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி 61 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வார எலிமினேஷன் யார் என்று மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். இந்த வார நாமினேஷனில் ஜனனி, சென்ராயன், டேனி, வைஷ்ணவி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் இந்த வாரம் வைஷ்ணவி தான் வெளியேற்றப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் புதிய புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் ஐஸ்வர்யா, மும்தாஜிடம் பயங்கரமாக கத்தி சண்டை போட்டு கொண்டுள்ளார். இது யார் அதிகம் தூங்குகிறார்கள் என கமல் கேட்க, இந்த சண்டை ஆரம்பிக்கிறது. மேலும் புரோமோ முடிவில் கமல், “5 நிமிடம் தருகிறேன். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் செல்லலாம்” என்று கூறுகிறார்.

இதோ அந்த வீடியோ…