அஜித் மற்றும் விஜய்யிடம் சீக்ரெட் பற்றி கேட்ட சமந்தா

அஜித் மற்றும் விஜய்யிடம் சீக்ரெட் பற்றி கேட்ட சமந்தா

அஜித் மற்றும் விஜய்யிடம் சீக்ரெட் பற்றி கேட்ட சமந்தா. நடிகை சமந்தா நடிப்பில் திரையரங்குகளில் சீமராஜா மற்றும் U Turn படங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது.

திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடிகைகள் நடித்து வெற்றி பெற முடியும் என நிரூபித்து காட்டிவிட்டார் சமந்தா.

சமீபத்தில் U Turn படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சமந்தாவிடம் அஜித் மாறும் விஜய்யிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்வி என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கு சமந்தா, விஜய் கடந்த 15 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார்.

ஆனால் நாளுக்கு நாள் அவரின் அழகு அதிகமாகி கொண்டே செல்கிறது. அதற்கு அவர் பின்பற்றும் சீக்ரெட் என்ன? என்று கேட்பாராம்.

அஜித்திடம், உங்களை மக்கள் அனைவரும் விரும்புகின்றனர். அதுமட்டுமில்லாமல், சினிமா பிரபலங்களும் ரசிகர்களாக உள்ளனர். இவ்வளவு ஏன் உங்களை அதிகம் தெரியாத என் கணவருக்கு கூட உங்களை பிடிக்கும். அதற்கான சீக்ரெட் என்ன? என கூறுங்கள். இவ்வாறு சமந்தா கூறினார்.