பிளாட்பாரத்தில் சமந்தா செய்த செயல்! வைரலாகும் புகைப்படம் உள்ளே

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை சென்ற வருடம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பெரும்பாலும் நடிகைகளுக்கு சினிமா வாய்ப்பு இருக்காது. ஆனால் சமந்தாவிற்கு பல படங்கள் கிடைக்க அதில் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.

இவர் நடிப்பில் அடுத்ததாக வரவிருக்கும் படம் U Turn. இந்நிலையில் சமந்தா மார்கெட் ஒன்றில் காய்கறி விற்பது போன்ற புகைப்படங்கள் வெளியானது. ஒருவேலை படத்தின் படபிடிப்பில் எடுக்கப்பட்டது என நினைத்தால், அந்த புகைப்படம் உண்மையாகவே காய்கறி விற்றது தானாம். சமந்தா ஒரு நல்ல காரியத்திற்காக இந்த செயலை செய்துள்ளார்.

தெலுங்கில் லக்ஷ்மி மஞ்சு நடத்தி வரும் தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் ஏழை மக்களுக்கு உதவி செய்ய ஒரு நாள் கூலி வேலை பார்த்து சம்பாதித்த பணத்தை அளிக்கிறார்கள். அந்த நிகழ்ச்சிக்காக தான் சமந்தா இப்படி காய்கறி மார்க்கெட்டில் விற்றுள்ளார்.

Samantha Akkineni