கேரளாவில் மாஸ் காட்டும் நயன்தாரா! பிரம்மாண்ட சாதனை

imaikka nodigal box office kerala

நயன்தாரா நடிப்பில் தற்போது திரையங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் தான் இமைக்கா நொடிகள். இந்த படத்தினை அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இப்படம் தமிழகம் மட்டுமில்லாமல் கேரளாவிலும் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.

இமைக்கா நொடிகள் படம் கேரளாவில் மட்டும் 1.8 கோடி வசூல் செய்துள்ளதாம். இந்த வசூல் வெறும் 3 நாட்களில் மட்டும் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த படத்தினை அங்கு வாங்கிய தொகை வெறும் ரூ 65 லட்சத்திற்கு தானாம். ஆனால், 3 நாட்களில் விநியோகஸ்தர்கள் ஷேர் மட்டும் கேரளாவில் இப்படத்திற்கு ரூ 75 லட்சம் கிடைத்துள்ளதாம். 3 நாட்களிலேயே ரூ 10 லட்சம் லாபம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எப்படியும் இப்படம் கேரளாவில் விநியோகஸ்தர்கள் ஷேர் ரூ 1.2 கோடி வரை கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

vijay sethupathi nayanthara in imaikka nodigal movie pics
Nayanthara, Vijay Sethupathi in Imaikka Nodigal Movie Pics