அந்த காட்சிகளில் முக சுளிப்பு இல்லாமல் நடித்தார் கேத்ரீன் – இயக்குனர் பெருமிதம்

நடிகை கேத்ரீன் தெரசா மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன்பின் கணிதன், கடம்பன், கலகலப்பு 2, கதாநாயகன் போன்ற பல படங்களில் நடித்துவிட்டார்.

இவர் அடுத்து சித்தார்த் உடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தினை சாய்சேகர் இயக்குகிறார். சாய்சேகர், நடிகை கேத்ரீன் தெரசாவை பற்றி கூறும் போது “இந்த படத்தில் அவரின் கதாப்பாத்திரம் வழக்கமான கதாநாயகிகளுக்கான வேடம் இல்லை. தன் நடிப்பால் கதையை நன்றாக உணர வைக்கும் நடிகை தான் நடிக்க வேண்டும். எனவே கேத்ரீன் தேவைப்பட்டார். மேலும் படப்பிடிப்பு மழை, வெயில் என்று இருந்தது. அதை எதுவும் பார்க்காமல் நடித்தார். ஒரு காட்சியில் வில்லன் அவர் தலை முடியை பிடித்து தரதரவென இழுத்து வருமாறு இருக்கும்.

மேலும் 30 கிலோ எடையுடன் 12 மணி நேரமாக நடிக்க வேண்டும். அதையும் எந்த வித முகச்சுளிப்பு இல்லாமல் நடித்தார்”. இவ்வாறு இயக்குனர் சாய்சேகர் கூறினார்.

Catherine Tresa and Siddharth movie
Catherine Tresa, Siddharth and Sathish movie