பிக்பாஸ் வைல்ட் கார்டு எண்ட்ரியாக நுழையும் பிரபல நடிகை

bigg boss tamil wild card entry kasthoori

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 எபிசோடுகளைத் தாண்டி, மீதமுள்ள 11 பேரில் யார் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்க வைத்துள்ளது. இந்த வாரம் (இன்று) நடிகர் பொன்னம்பலம் வெளியாகப் போவதாக தகவல்கள் பரவி வருகிறது.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டினுள் “வைல்ட் கார்டு” எண்ட்ரியாக நடிகை கஸ்தூரி செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதற்குமுன் “நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. என் வீட்டில் இருக்கும் என் மகனான சின்ன பிக்பாஸை பார்த்துகொள்வது தான் முக்கியம்” என்று கூறினார். மேலும் தற்போது பிக்பாஸ் வீட்டினுள் கஸ்தூரி சென்றுவிடார் என கூறுகின்றனர். ஆனால் இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

கடந்த ஆண்டை விட இப்போது ஒளியாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரசியமாக இல்லை என பேசப்படுகிறது. ஒரு வேலை நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டினுள் சென்றால் சுவாரசியம் சற்று கூட வாய்பிருக்கிறது.

kasthuri

kasthuri