இந்த வயதிலும் அழகு பதுமையாக ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராய் வெளியிட்ட சீக்ரெட்

Aishwarya Rai

நடிகை ஐஸ்வர்யா ராய் 1994-ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டத்தினை வென்றார். அதுமட்டுமின்றி உலக அழகி என்றால் நமக்கு முதலில் ஞாபகம் வருவது ஐஸ்வர்யா ராய் தான். இவர் 1997-ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய இருவர் படத்திலிருந்து இன்று வரை கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக உள்ளார்.

இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 2007-ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் அபிஷேக் பட்சனைத் திருமணம் செய்து கொண்டார். பிறகு இவர்களுக்கு ஒரு அழகான் பெண் குழந்தையும் உள்ளது. திருமணத்திற்கு பிறகும் படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் 45 வயதை நெருங்கும் இவரிடம் அழகு மட்டும் குறையாமல் அப்படியே உள்ளது.

இந்த அழகின் ரகசியத்தினை பற்றி கூறும் ஐஸ்வர்யா “நான் உடற்பயிற்சி எல்லாம் செய்ய மாட்டேன். என உடல் இயற்கையாகவே இப்படித்தான் உள்ளது. என் உடலில் மெட்டபாலிசம் நன்றாக உள்ளதால் எடை சரியாக உள்ளது. ஆனால் தற்போது யோகா செய்ய நினைக்கிறேன்” என்றார்.

Aishwarya Rai