மகள் மீதே போலீசிடம் புகார் கொடுத்த விஜயகுமார்!

மகள் மீதே புகார் கொடுத்த விஜயகுமார்! பெரிய சண்டை. நடிகர் விஜயகுமாருக்கு அருண்விஜய் மற்றும் ஐந்து மகள்கள் உள்ளனர்.

அவர்களில் ஒருவரான வனிதா உடன் விஜயகுமாருக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தகராறு இருந்து வருவது அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் மதுரவாயில் ஆலப்பாக்கத்தில் விஜயகுமாருக்கு சொந்தமான வீடு ஓன்று உள்ளது. அந்த வீட்டை அவரது மகள் வனிதா குத்தகைக்கு எடுத்து தங்கியுள்ளார். குத்தகை முடிந்து பல நாட்கள் ஆனதால் விஜயகுமார் அவரை காலி செய்யுமாறு கூறியுள்ளார். அதற்கு வனிதா மறுக்க, விஜயகுமார் காவல் துறையிடம் புகார் கொடுத்துள்ளார்.

மேலும் பிரபல நடிகராக இருக்கும் விஜயகுமார், மகள் மீதே போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Actress-vinitha

vinitha