விஜய்யை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்! புகழ்ந்து பேசிய கேரளா அமைச்சர்

Vijay

கேரளாவில் பெய்த மழையால அங்குள்ள மக்கள் அனைவரும் பெரிதும் துன்பப்பட்டனர். யாராவது உதவ மாட்டார்களா என இருந்தனர். அப்போது அவர்களுக்கு பல பிரபலங்கள் உதவினர். பணங்களை கேரளா முதலமைச்சரிடம் நிவாரண நிதியாக வழங்கினர்.

ஆனால் கேரளாவில் உள்ள மிகப்பெரிய நடிகர்கள் குறைந்த அளவு பணத்தையே கொடுத்துள்ளனர். அவர்களின் இந்த செயலை விமர்சிக்கும் வகையில் கேரளா சுற்றுலா துறை அமைச்சர் Kadakampally Surendran பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, “விஜய் 70 லட்சம், பிரபாஸ் 1 கோடி, முதல் முதலில் நிவாரண தொகை அறிவித்த சூர்யா-கார்த்தி, விஜயகாந்த் 1 கோடி மற்றும் லாரன்ஸ் 1 கோடி என மற்ற மாநில நடிகர்களே வெள்ளம் பாதித்த கேரள மக்களுக்கு அதிகமாக உதவியுள்ளனர். ஆனால் இங்கு இருக்கும் நீங்கள் எவ்வளவு கொடுத்துள்ளீர்கள் என பாருங்கள். அதிகமாக சம்பளம் வாங்குகிறீர்கள் இன்னும் அதிகமாக கொடுத்திருக்க வேண்டாம.” என பேசியுள்ளார்.

இந்த விசயத்தில் அவர்களை ரோல் மாடலாக எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.