2 மணி நேரத்தில் சிம்டாங்காரன் பாடல் செய்த சாதனை! உண்மை ரிப்போர்ட்

2 மணி நேரத்தில் சிம்டாங்காரன் பாடல் செய்த சாதனை! உண்மை ரிப்போர்ட்

2 மணி நேரத்தில் சிம்டாங்காரன் பாடல் செய்த சாதனை! உண்மை ரிப்போர்ட்.

அஜித் நடிப்பில் வெளிவந்த விவேகம் படத்தின் சர்வைவா பாடல் நல்ல ஹிட் அடித்தது, அந்தப் பாடலை இதுவரையில் யூடியூபில் 20 மில்லியனுக்கும் அதிகமான பேர் பார்த்துள்ளனர், மூணு லட்சம் லைக்ஸ்களை அள்ளியது.

தற்போது உள்ள சினிமா சூழ்நிலையில் போட்டிகள் என்பது படத்தின் வெற்றி மட்டும் குறிப்பவை அல்ல மோஷன் போஸ்டர், டீஸர், டிரெய்லர் என அனைத்திலும் போட்டி போட்டுக்கொண்டு வெளியிடுகின்றனர்.

படத்தினால் லாபம் வருமோ இல்லையோ இந்த மாதிரி சோசியல் மீடியாக்களினால் கோடிகளில் லாபம் பெறுகின்றனர் தயாரிப்பாளர்கள்.

இதுபோக படம் வெளியீட்டுக்கு பின்னர் படம் நல்லா இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஓரளவு வசூலை அள்ளிக் கொண்டு சென்றுவிடுவர்.

இப்பொழுது விஜய் நடிப்பில் வெளிவந்த சர்க்கார் படத்தின் சிம்டாகாரன் என்ற பாடல் வெளிவந்த இரண்டு மணி நேரத்தில் 3 லட்சம் லைக்குகளை பெற்றது.

இப்பொழுது வரை 45 லட்சம் பார்வையாளர்களை பெற்றது இதுவே ஒரு சாதனைதான். கண்டிப்பாக சர்கார் பாடல் நாளை பத்து மில்லியன் பார்வையாளர்களை கண்டிப்பாக பெறும்.

ஆரம்பத்தில் சர்கார் பாடலை அனைவரும் கிண்டல் செய்தனர் மேலும் 52,000 டிஸ்லைக் வாங்கியுள்ளது இருந்தாலும் விஜய் ரசிகர்களின் ஆதரவினால் அதன் சாதனை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கண்டிப்பாக நாளைக்குள் ஒரு கோடி ஹிட்ஸை கடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.