ஸ்ரீ ரெட்டி கேட்ட கேள்வி..! வீடியோவை பார்த்த சிம்புவின் அதிரடி பதில்

சிம்பு எப்போது தன் மனதில் பட்டதை, யாருக்கும் மறைக்காமல் வெளிப்படையாக பேசக் கூடியவர். சமீபத்தில் இவர் விகிடன் குழுவுடன் கலந்துரையாடலில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் ஸ்ரீ ரெட்டி கேள்வி ஒன்றினை கேட்டார்.

சினிமாவில் பல நடிகைகளுக்கும், தனக்கும் “நடிகர்கள் மற்றும் இயக்குனர்களால்” ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை வெளியில் கூறியவர் தான் ஸ்ரீ ரெட்டி. இவர் நடிகர் சிம்புவிடம் விகிடன் இண்டர்வியூவில் செல்ஃபி வீடியோ மூலம் கேள்வி ஒன்றினை முன்வைத்தார்.

அவர் கேட்ட கேள்வி “ உங்கள் தந்தை டி ராஜேந்திரன் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவரின் மகனான உங்களுக்கு எந்த மாதிரியான மனைவி வேண்டும் என ஆசைபடுறிங்க?” அதற்கு சிம்பு முதலில் அங்கு உள்ளவர்களிடம் “ஸ்ரீ ரெட்டியின் லிஸ்டில் நான் வரலன்றது உங்க கண்ணுக்கு தெரியாதே” என சிரித்துக் கொண்டே கூறினார். பின்னர் அவர் கேட்ட கேள்விக்கு “ஒரு பெண்ணா வந்தா போதும்… அதுல நிறைய அர்த்தம் இருக்கு” என்று கூறினார். அதன்பின் “ஒரு பெண்ணா நான் செய்யனும்-னு ஆசை படுகிற விசயத்தை, செய்யவிடாம தடுக்கும் சமூதாயத்திடன் எங்கள அதை செய்ய விடுங்க என சண்டை போதுவதில் தான் இருக்கிறது பெண்களின் அதிகாரம்(women empowerment)” என்று அருமையாக பேசினார் சிம்பு.