கேரளா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சூப்பர் ஸ்டார் கொடுத்தது இதுதான்!

rajinikanth donations for kerala flood

கடும் மழையாலும் அதனால் ஏற்படும் நிலச்சரிவாலும் கேரள மக்கள் படும் துயரத்தை நான் சொல்லிதான் தெரிய வேண்டும் என இல்லை. உண்ண உணவும் தங்க இடமும் இன்றி அவர்கள் படும் வேதனை மனதை பதற வைக்கிறது.

இதற்கு சினிமா பிரபலங்களில் இருந்து பாமர மக்கள் வரை தங்களால் இயன்றதை அளித்து வருகின்றனர். அவ்வாறுதான் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த் தனது பங்கிற்கு 15 லட்சத்தை கொடுத்துள்ளார்.

அஜித், விஜய் இன்னும் எந்த முடிவையையும் எடுக்காத நேரத்தில் ரஜினியின் இந்த முடிவு பலரை புன்னகை அடைய செய்திருக்கிறது.