சில வருடங்களுக்கு முன் ரஜினி செய்த சாதனையை மீண்டும் நிகழ்த்தி காட்டிய விஜய்

Rajini Vijay

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்றால் அது எப்போது நடிகர் ரஜினிதான். ஆனால் அவர் தற்போது அரசியல் கட்சி தொடங்கி, அரசியலில் நுழைய இருப்பதால் அந்த சூப்பர் ஸ்டார் இடத்திற்கு பல நடிகர்கள் போட்டிபோட்டு வருகின்றனர்.

இந்த இடத்திற்கு மிகவும் பொருத்தமானவர் நடிகர் விஜய் தான் என அவர் ரசிகர்கள் கூறிவருகிறார்கள். விஜய் கடைசியாக நடித்த படம் மெர்சல். இந்த படம் இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலகளவில் மிகவும் பிரபலமானது. இந்நிலையில், தமிழ் சினிமாவில் முதல்முறையாக மெர்சல் படம் சீனாவில் ரிலீஸாகவுள்ளது. இதை கொண்டாடும் விதமாக விஜய் ரசிகர்கள் “MERSAL STORM IN CHINA SOON” என்ற ஹாஸ்டேக்கினை உலகளவில் ட்ரண்ட் செய்து வருகின்றனர்.

இதற்கு முன்பு ரஜினியில் முத்து படம் ஜப்பானில் வெளியாகி அனைவராலும் பேசப்பட்டது. தற்போது மெர்சல் சீனாவில் வெளியாவது அனைவரினையும் ஆச்சிரியப்படுத்தியுள்ளது.