தளபதி விஜய்க்கு புதிய பட்டபெயர் கொடுத்த பிரபல நடிகர்

தளபதி விஜய்க்கு புதிய பட்டபெயர் கொடுத்த பிரபல நடிகர்

தளபதி விஜய்க்கு புதிய பட்டபெயர் கொடுத்த பிரபல நடிகர். இளைய தளபதி விஜய்க்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

குறிப்பாக தமிழகத்துக்கு அடுத்ததாக கேரளாவில் இவருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் ரசிகர்களாக உள்ளனர்.

இவருக்கு இணையான சக போட்டி நடிகராக அஜித் உள்ளார். இந்நிலையில் எந்த சினிமா பேட்டி எடுத்தாலும் அதில் கலந்து கொள்ளும் பிரபலங்களிடம் விஜய், அஜித் பற்றிய கேள்வி கண்டிப்பாக இருக்கு. அப்படித்தான் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட நடிகர் டெல்லி கணேஷிடம் விஜய் பற்றி கேட்கப்பட்டது.

அதற்கு டெல்லி கணேஷ் “விஜய் நடனம் மூலம் தான் மக்களை கவர்ந்தார். பின்பு தான் அவரை ரசிகர்கள் கவனிக்கத் தொடங்கினர்.

அவரின் நடிப்புக்கும் ஒரு சிறந்த அங்கிகாரம் மக்கள் மத்தியில் கிடைத்தது. விஜய் மக்களுக்கு என்ன பிடிக்கும், அவர்களின் பிரச்சனைகள் என்ன? அதற்க்கான தீர்வு என்ன? என்பது பற்றி அவர் படங்களில் காட்டுவார். அதனால் அவர் மக்களின் நாயகன்.” என்று கூறினார். இந்த மக்களின் நாயகன் விஜய் என்ற பெயர் ரசிகர்களுக்கும் பிடித்தது விட்டது.