ஒரு நல்ல அவார்ட் வாங்கக் கூடிய படத்துல நடிங்க விஜய்..! வெளிய வாங்க அஜித்

kalaa master open talk about vijay and ajith

தமிழ் சினிமாவில் அஜித் விஜய் பற்றி பேசாதவர்கள் யாருமே இல்லை. அந்தவகையில், எந்த பேட்டிகளிலும் இவர்கள் பற்றிய கேள்விகள் கண்டிப்பாக இடம் பிடிக்கும். அந்த அளவுக்கு இவர்கள் ரசிகர்களின் பலம் அதிகம். இவர்கள் இருவரை வைத்தே பல பேர் வாழ்கையை நடத்தி வருகின்றனர். தற்போது பிரபல நடன இயக்குனர் கலா மாஸ்டர் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார்.

அதில் அவரிடம் அஜித், விஜய் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது. அஜித்தை “அமராவதி” படத்தின் போது பார்த்தேன். அதன் பின் நீண்ட நாட்களுக்கு பின்னர் நேரில் சந்தித்த போது பலவற்றை பற்றி பேசினோம். அஜித்திற்கு உண்மையில் பிறரை பற்றி புகழ்ந்து பேசி காக்கா பிடிக்கத் தெரியாது. அதே போல் அவர் அனைவருக்கு பல உதவிகள் செய்து வருகிறார். ஆனால் அதை வெளியில் காண்பித்துக் கொள்வதில்லை அவர். அஜித்திடன் நான் கேட்கும் ஒரு விஷயம், “தயவு செய்து வெளியே வாங்க. எல்லா விஷயத்திலும்” என்று கூறியிருந்தார்.

Ajith

மேலும் விஜய் பற்றி கூறும் போது, இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது போல் தான் அவர் இருப்பார். விஜயின் நடனம் டான்ஸர்களே மிரண்டு போகும் அளவுக்கு இருக்கும். அந்த அளவுக்கு அருமையாக நடனமாடுவார். சமீப காலமாக அவர் செய்த உதவிகள யாருக்கும் தெரியாத வண்ணம் மிகவும் அமைதியாக இரவு நேரங்களில் சென்று உதவி வருகிறார். அஜித் போன்று சிறப்பான மனிதர் விஜய். விஜய்யிடம் நான் கேட்க விரும்பும் ஒரே கேள்வி என்னவென்றால், “நீங்கள் ஒரு நல்ல அவார்ட் வாங்கக் கூடிய படத்தில் நடியுங்கள். உங்களுக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும்” என்று கலா மாஸ்டர் கூறியிருந்தார்.

vijay tuticorin