தமிழக முதல்வரை சந்தித்த விவேக்! இதற்காகத் தான் பார்த்தாரா?

Edappadi K Palaniswamy and Vivek

சின்ன கலைவாணர் என மக்களால் அன்போடு அழைக்கப்படுபவர் “நடிகர் விவேக்”. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகரான இவர் ரஜினி, கமல், விஜய், அஜித் என பல நடிகர்களுடன் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்துள்ளார்.
Edappadi K Palaniswamy and Vivek

நடிகர் விவேக், டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒருவர். விவேக் “கலாம்” ஐயா அவர்களை பின்பற்றி பல மரக்கன்றுகளை தமிழகம் முழுவதும் நட்டுவருகிறார். இதுவரை 25 லட்சம் மரக்கன்றுகளுக்கு மேல் நட்டுள்ளார். மேலும் கலாம் ஐயா அவர்கள் கூறியது போல் 1 கோடி மரக்கன்றுகளுக்கு மேல் நடவுள்ளார். இதற்க்காக “கிறீன் கலாம்” என்ற அமைப்பையும் வைத்துள்ளார்.

இதற்க்கான முயற்சியின் போது தான் தமிழக முதல்வர் பழனிச்சாமி அவர்களை சந்தித்துள்ளார். அப்போது, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பது குறித்து பேசியுள்ளார் நடிகர் விவேக். இவரின் இந்த முயற்சி வெற்றி பெற நாமும் நமது வாழ்த்துக்களை கூறுவோம்.