விஜய் சாதனையை முறியடித்த ரஜினியின் 2.0 டீஸர்

விஜய் சாதனையை முறியடித்த ரஜினியின் 2.0 டீஸர்

விஜய் சாதனையை முறியடித்த ரஜினியின் 2.0 டீஸர். தளபதி விஜய் நடிப்பில் சென்ற வருடம் வெளியாகி அமோக வெற்றி பெற்ற படம் மெர்சல்.

மெர்சல் படத்தின் மொத்த வசூல் ரூ.250 கோடி. மெர்சல் வசூல் மட்டுமில்லாமல் அதன் டீசரும் பல சாதனைகளை செய்தது.

ஒரே நாளில் மெர்சல் டீஸர் 10 மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களை பெற்றது. இந்நிலையில் தற்போது தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் 2.0 டீஸர் வெளியாகியுள்ளது.

இந்த மூன்று மொழிகளையும் சேர்த்து 24 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது 2.0 டீஸர். இவை வெளியான ஒரே நாளில் நடந்துள்ளது.

எனவே, சூப்பர் ஸ்டார் ரஜினி மெர்சல் சாதனையை முறியடித்துள்ளார். ஆனால், தளபதியின் மெர்சல் தமிழில் மட்டுமே வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.